வேட்டுவம் நாயகி ஷோபிதாவா?
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரஞ்சித்
இவர் சாதிய வன்முறைக்கு எதிராக பல படங்கள் எடுத்துள்ளார். நீளம் நிறுவனம் மூலம் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தங்கலான் நல்ல வரவேற்பைப் பெற்றது
இதை தொடர்ந்து அடுத்து அவர் இயக்க உள்ள படம் வேட்டுவன்
வேட்டுவம் திரைப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்
வேட்டுவம் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த ஷோபிதா, வேட்டுவம் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது
இதைக் குறித்த அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது