நடிகர் - நடிகைகள் சினிமா மட்டுமல்லாம் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் சிலர்...
ரஜினிகாந்த் அறிவுறுத்தலால் ரசிகர்கள் பல ஆண்டு காலமாக ரத்த தானம், அன்னதானம், உடல் உறுப்பு தானம் செய்து வருக்கின்றனர்.
கமல்ஹாசன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி, இளைஞர்களை உடல் உறுப்பு தானம் செய்ய வைக்கிறார்.
நடிகர் அஜித் சத்தமில்லாமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
விஜய் தன் ரசிகர்கள் மூலம் உணவு, உடை வழங்குதல், உறுப்பு தானம், ரத்ததானம், மருத்துவ முகாம் போன்ற சேவைகளை செய்கிறார்.
நடிகர் சூர்யா பல ஆண்டுகளாக அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறார்.
கார்த்தியும் உழவர் ஃபவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஊனமுற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை படிக்க வைத்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா, மும்பையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து, உணவு, உடை, உறைவிடம், போன்றவற்றை அளித்து, அவர்களை படிக்கவும் வைக்கிறார்.
நடிகை சமந்தா, பிரதியுக்ஷா என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மருத்துவ உதவி செய்கிறார்.
நடிகை திரிஷா தெருவில் வசிக்கும் நாய்களை தத்தெடுத்து உணவு வழங்கி பராமரித்து வருகிறார்.
நடிகை டாப்சி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவும் ஒரு நிறுவத்தில் இணைந்து, அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்.