இந்த வாரம் திரைக்கு வரும் 9 படங்கள்!
அதர்வா நடித்து ராஜ்மோகன் இயக்கிய ‘அட்ரஸ்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது
‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தில் பாரதிராஜா , ரியோ ராஜ் , சாண்டி மாஸ்டர் , யோகி பாபு என முன்னணி நடிகர்களை வைத்து, பிரிட்டோ ஜேபி இயக்கி இருக்கிறார்
ஜி வி பிரகாஷ் நடித்து, இசையமைத்துள்ள ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது
நடிகை லாஸ்லியா மற்றும் நடிகை லிஜோமோன் ஜோஸ், முக்கியமான கதாபாத்திரமாக நடித்துள்ள ‘ஜென்டில்வுமன்’ இந்த வாரம் திரைக்கு வருகிறது
ஹேமந்த் நாராயணன் இயக்கிய திகில் திரைப்படம் ‘மர்மம்’, இந்த வாரம் வெளியாகிறது
வைபவ் மற்றும் பார்வதி இணைந்து நடித்துள்ள ‘ஆலம்பனா’ வெளியாகிறது
நடிகர் ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். அஸ்திரம் இந்த வாரம் திரைக்கு வருகிறது
பெண்ணை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து எடுத்துள்ள ஆன்மிக படமான ‘எமகாதகி’ இந்த வாரம் வெளியாகிறது
யோகி பாபு, VTV கணேஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள நகைச்சுவை படமான ‘லெக் பீஸ்’ இந்த வாரம் வெளியாகிறது