தேசிய விருதுகள் 2022 : எந்தெந்த படத்திற்கு என்ன விருது?

Published by: பிரியதர்ஷினி

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வம் பாகம் 1 பெற்றுள்ளது

சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் ஒளிப்பதிவிற்கான விருதை ரவி வர்மாவும் பொன்னியின் செல்வன் படத்திற்காக பெற்றுள்ளனர்

சிறந்த பின்னணி இசைக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்

சிறந்த நடிகருக்கான விருதை காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டி பெற்றுள்ளார்

சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை காந்தாரா படம் வென்றுள்ளது

சிறந்த கன்னட படத்திற்கான விருதை கே.ஜி.எஃப் படம் பெற்றுள்ளது

கே.ஜி.எஃப் படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருதை அன்பறிவு மாஸ்டர் வென்றுள்ளனர்

சிறந்த நடன இயக்கத்திற்கான விருதை திருசிற்றம்பலம் படத்தில் இடம்பெறும் மேகம் கருக்காதா படத்திற்காக ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுள்ளனர்

திருசிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிரிவில் தேசிய விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது

சிறந்த பாடலுக்கான விருதை பிரம்மாஸ்ட்ரா படம் வென்றுள்ளது

கேசரியா பாடலுக்காக சிறந்த பாடகருக்கான விருதை அரிஜித் சிங் வென்றுள்ளார்