90களில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி.
தற்போது 2025 கும்பமேளாவில் ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜனவரி 29 நடைபெறும் மௌனி அமாவாசை ஸ்னானத்தின் மங்கள் விழாவிற்காக பிரயாக்ராஜில் இருக்கிறார்.
அப்போது தனது யாத்திரை திட்டங்களைப் பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
PTI பகிர்ந்துள்ள வீடியோவின்படி, கின்னர அகாராவின் கீழ் இந்து சன்யாசினி துறவியாக புனிதப்படுத்தப்பட்டார்.
கின்னர் அகாராவின் மஹாமண்டலேஷ்வர் கௌசல்யா நந்த் கிரி (அ) டினா மா, நடிகை குல்கர்னி ’பிண்ட் டான்’ எனப்படும் சடங்கை தானே செய்துகொண்டதாக PTI-யிடம் கூறியிருக்கிறார்.
இது கங்கை ஆற்றில் வெள்ளிக்கிழமை(24/01/2025) நடைபெற்றது.
பிரயாக்ராஜில் சடங்குகளை முடித்த பிறகு அயோத்யா, வாரணாசி போன்ற இடங்களுக்கு செல்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரின் பழைய நேர்காணல் ஒன்றில், பாலிவுட்டிலிருந்து நீங்கியதற்கு காரணம் ஆன்மீகம் தான் என்று கூறியிருந்தார்.
தான் 12 வருடங்கள் தவம் செய்து பிரம்மச்சாரியாக வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.