விஜய் சேதுபதி நடித்து நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மகாராஜா இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன், சிங்கம் புலி, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர் விஜய் சேதுபதி, லட்சுமி காணவில்லை என்று போலீஸிடம் புகார் அளிக்கிறார். இதற்கு நடுவில் வில்லன் வருகிறார். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் லட்சுமிக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் கதை. நடராஜன் நடிப்பு படத்தின் பிளஸ் படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும் இரண்டாம் பாதி உணர்வுபூர்வமாகவும் இருக்கும் சீரியஸான கதையை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இயக்கியுள்ளார் படத்தில் இரு வேறு உணர்வுகளை இணைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் வில்லன் கதாபாத்திரம் பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒகே ரகமாக இருக்கும் படத்தின் ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது, இருப்பினும் பின்னணி இசை படத்தின் வேகத்தை கூட்டியுள்ளது வார இறுதியில் குடும்பத்துடன் சென்று மகாராஜா படத்தை பார்க்கலாம்