‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் எப்போது தெரியுமா?
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வெளியீட்டு தேதி பற்றி விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இந்தப் படத்தில் வெளியீட்டு எப்போது என்று உறுதியாகாமல் இருக்கிறது. ஷூட்டிங் நிறைவு பெற்றுவிட்டது.
இதனிடையே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் படத்தின் Post Production வேலைகள் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
” படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும் நிறைய சவால்கள் இருந்தன. இருந்தாலும் நாங்கள் புன்னையுடன் நேர்மையான உழைப்பை படத்திற்கு அளித்தோம். அப்படி உருவாகியிருப்பதுதான் ’‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’'.
”LIK திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எந்த காட்சியையும் சமரசம் செய்யாமல் ஃப்ரெஷ் பொழுதுப்போக்கு ரசிகர்களுக்கு இருக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறோம்.” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பதிவில் ' To Bring it you on a festival date' என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விக்னேஷ் சிவன் படத்தின் வெளியீட்டு தேதி பற்றி க்ளூ கொடுத்திருக்கிறார்.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ 2025ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று தெரிகிறது.
லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளர். சில பாடல்களும் வெளியாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’.