ரித்திக் ரோஷனின் ‘Krrish 4’ எப்போது ரிலீஸ்?
பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷன், கடந்த 2006ம் ஆண்டு தனது மகன் ரித்திக் ரோஷனை வைத்து “க்ரிஷ்” எனும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
2003 ஆம் ஆண்டு வெளியான 'கோய்... மில் கயா' இரண்டாவது பாகமாகவே க்ரிஷ் படத்தை வெளியிட்டார். 2013-l 3-வது பாகமும் சூப்பர் ஹிட். க்ரிஷ் 4 உருவாகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது.
க்ரிஷ் 4 திரைப்படத்த்தின் மூலம் ரித்திக் ரோஷன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
க்ரிஷ் 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, அடுத்த ஆண்டு திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
திரைக்கதை இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், ப்ரீ-ப்ரொடக்சன் பணிகள் நடந்து வருகிறதாம்.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான க்ரிஷ் படத்தின் மூன்றாம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரணாவாத் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதோடு, க்ரிஷ் -4 பட அறிவிப்பின் இண்டாகிராம் போஸ்ட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா கமெண்ட் செய்துள்ளார்.
க்ரிஷ் -4 பட உருவாகிறது என்ற அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.