சியான் விக்ரமின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

சினிமா உலகில் விக்ரமின் நடிப்பும் அவரது திறமையும் அறியாதவர்கள் இல்லை. ஒவ்வொரு படத்திலும் அவரது தனித்திறன் தெரியும்.

அந்நியன், ஐ, சேது, பிதாமகன், தெய்வ திருமகள் என அவர் நடித்த படங்களில் மிகச் சிறப்பானது என்று லிஸ்டே இருக்கிறது. ஏப்ர; 17-ம் தேதி விக்ரம் பிறந்தநாள்.

59 வயதிலும் ஃபிட்டாக இளமையான தோற்றத்துடன் இருப்பதாக அவரது ரசிகர்கள் சொல்கின்றனர்.

விக்ரம், தன் திறமையால் தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கியவர்.

இவரது சொத்து மதிப்பு ரூ. 200 கோடி முதல் ரூ. 250 கோடி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விக்ரமிடம் Toyota Land Cruiser Prado, Audi Q7 Quattro, Audi A4,Audi A8, Porsche 911 Turbo ஆகிய சொகுசு கார்கள் இருக்கிறதாம்.

உடற்பயிற்சி, உணவு இரண்டையும் விரும்புபவர் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இதோடு, நடிகர் விக்ரமின் தனிப்பட்ட சொத்து மதிப்பு குறித்து உண்மையாக தகவல் ஏதும் தெரியவில்லை.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விக்ரம்.. மகிழ்ந்திருங்கள்!