சியான் விக்ரமின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர்.1990-களில் திரைத்துறைக்கு வந்தாலும் சேது படம் முதல் வீர தீர சூரன் என அவர் நடித்த எல்லா படத்திலும் திறமையான நடிப்பையும், அந்த நடிப்பிற்காக முழு ஈடுபாட்டோடு உழைப்பவர் விக்ரம்.

சேது திரைப்படம் விக்ரமின் திறமையை முழுவதுமாக வெளிகொண்டு வந்தது என்றே சொல்லலாம். அவர் நடிக்கும் கதாபாத்திரற்கு ஏற்றார்போல மாறுவது என்பது அவருக்கு கைத்தேர்ந்த கலை..

விக்ரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு மேற்கொள்ளும் மெனக்கடல் முக்கியமானது. அதோடு, தனிப்பட்ட வாழ்விலும் உடலைக் கட்டுக்கோப்பான வைத்திருக்க விரும்புவராம் விக்ரம்.

தினமும் உடற்பயிற்சி செய்வதும், அதிக உடல் உழைப்புடன் ஒர்க் அவுட என இருப்பாரம் விக்ரம். தினமும் உடற்பயிற்சி செய்வதை தவறவிடமாட்டார் என்கின்றனர்.

விக்ரம் உணவுப் பிரியர் என்றாலும் அவர் உடலுக்கு தீங்கான உணவுகளை சாப்பிடுவதில்லையாம். ஃபைபர், புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவாராம்.

சரிவிகித உணவு, அவருக்கு செட் ஆகும் உணவுகளை அளவோடு சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.

விக்ரம் ஃபிட்னஸ் பற்றி குறிப்பிடும்போது அவர் ஓரே மாதிரியான உணவுகளை சாப்பிடுவதில்லை. இருந்தாலும்,ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் உடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்கிறாராம்.

59 வயதாகும் விக்ரம் உடல்தோற்றம் அவ்வளவு வயதானதுபோல இருக்காது. அவரிம் இளமையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உணவுமுறை, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில், ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.