குடும்பஸ்தன் ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது?

Published by: ஜான்சி ராணி

அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும்  படம் குடும்பஸ்தன்.

சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜெய ஜெய ஜெய ஹே புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள்  நடித்திருக்கின்றனர். வைசாக் இசையமைத்துள்ளார்.

ஜெய் பீம் படத்தில் ராஜாகண்ணுவாக நடித்து ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் மணிகண்டன். தொடர்ந்து இவர் நடித்த குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன

குடும்ப ரசிகர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமான எளிமையான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மணிகண்டன்.

ஒரு சாதாரண மிடில் கிளால் மேன் ஒரு மாதத்தை ஓட்டுவதற்கு எதிர்கொள்ளும் சவால்களையே படமாக்கியுள்ளார்கள். சின்ன சின்ன உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெற்றி பெற்ற படம் இது.

குடும்பஸ்த்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ -5 தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.

மணிகண்டன் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.