பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்து வெளிவந்த படம் கொட்டுக்காளி
மீனா பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதை அவரது கும்பத்தினர்கள் தெரிந்துக் கொள்கின்றனர் . அதன் பிறகு மீனாவை பூசாரியிடம் மந்திரிக்க கூட்டி செல்கிறார்கள். பூசாரியிடம் அழைத்து செல்லும் பயணத்தையும், வழி ஏற்படும் தடங்கல்களையும் மையமாக வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார் வினோத் ராஜ்
படத்தின் கதை மெதுவாக நகர்ந்தாலும், உரையாடல்கள் சுவராஸ்யத்தை கூட்டியுள்ளது
படத்தில் இசை இல்லாதது பெரிய குறையாக தெரியவில்லை என்று கூட கூறலாம்
சூரியின் கண்களில் விழுந்த பூச்சியை எடுக்கும் காட்சி சிறப்பாக இருந்தது
படத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடிப்பு மிக இயல்பாக இருந்தது
முக்கிய கதபாத்திரங்கள் தவிர்த்து மற்ற கதாபத்திரங்களின் காட்சிகள் படத்திற்கு துணையாக நிற்காதது மைனஸாக உள்ளது
சூரியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கொட்டுக்களி படத்தை அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்