Netflix தளத்திற்காக எடுக்கப்படும் வெப் தொடரில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள இந்த வெப் தொடருக்கு ‘அக்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதன் டீசர் நேற்று வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெப் தொடரை தர்மராஜ் ஷெட்டி எழுதி, இயக்கியுள்ளார். YRF தயாரிப்பு நிறுவனம் இத்தொடரை தயாரித்துள்ளது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே மற்றும் அக்ஷயே விதானி, தன்வி ஆஸ்மி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கேங்க்ஸ்டர் ராணிகளைச் சுற்றி நடக்கும் ஒரு கதையாக அக்கா தொடர் உள்ளது.