கூத்து கலைஞனின் வாழ்க்கையை காட்டும் ஜமா படம் நல்லா இருக்கா?
Published by: அனுஷ் ச
பாரி இளவழகன் இயக்கி, நடித்துள்ள படம் ஜமா
இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், கே.வி. என் மணிமேகலை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
நாடகத்தில் எப்போதும் பெண் வேடம் போட்டு நடிக்கும் ஹீரோ. அவரின் ஒரே ஆசை நாடக குழுவிற்கு வாத்தியார் ஆக வேண்டும் என்பது மட்டுமே. அந்த ஆசை நிறைவேறியாதா? இல்லையா? என்பதே படத்தின் கதை
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்கையை மிகவும் நேர்தியான முறையில் படமாக்கியுள்ளார் இயக்குநர்
ஈகோ , குரு சிஷ்யன் மோதல் போன்ற காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது
படத்தில் சேத்தன் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்தது
திரைக்கதை ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரு நேர்கோட்டில் செல்வது ஒரு மைனஸாக இருக்கிறது
இளையராஜா இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது
தெருக்கூத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜமா படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கலாம்