வித்தியாசமான கதை ஆனால்..வாஸ்கோடாகாமா படத்தின் குட்டி விமர்சனம் இதோ!

Published by: அனுஷ் ச

ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்துள்ள படம் வாஸ்கோடாகாமா

வம்சி கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், முனிஷ் காந்த், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

எதிர்காலத்தில் நல்லவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். நல்லவனாக வாழும் நகுல் எதனால் சிறைக்கு செல்கிறான்? அவன் சந்திக்கும் சவால் என்ன என்பதே படத்தின் கதை

படத்தின் கதை வித்யாசமாய் இருந்தாலும் திரைக்கரை மிகவும் பலவினமாக இருக்கிறது

முதல் பாதி கற்பனை காட்சியாக அமைய இரண்டாம் பாதி சிறையிலேயே நகர்கிறது

கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் கொஞ்சம் ரசிக்கும் படியாக இருந்தது

படத்தில் பாடல்கள் இல்லாதது ஒரு பிளஸாக அமைந்தது

படத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறலாம்

படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் காணப்படுகிறது

இருப்பினும் வித்யாசமான படங்களை விரும்புபவர்கள் இப்படத்தை தியேட்டரில் பார்க்கலாம்