இப்படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தற்போது விடாமுயற்சி ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ப்ரீ புக்கிங் நடந்து வருகிறது.
ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு ப்ரீ புக்கிங் செய்து வருகிறார்கள்.