பத்ம ஸ்ரீ முதல் ஆஸ்கர் வரை: ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள்

Published by: ABP NADU

பத்ம விருதுகள்

2000-ல் பத்ம ஸ்ரீ விருதும், 2010-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.

தேசிய விருதுகள்

1992-ல் ரோஜா, 1996-ல் மின்சார கனவு, 2001-ல் லகான், 2002-ல் கண்ணத்தில் முத்தமிட்டாள், 2017-ல் காற்று வெளியிடை மற்றும் மாம், 2022-ல் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1, திரைப்படங்களுக்காக தேசிய விருதுகள் பெற்றார்.

ஆஸ்கர் விருதுகள்

2008-ல் ‘Slumdog Millionaire' படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார்.

இதர தேசிய விருதுகள்

‘Slumdog Millionaire' படத்திற்காக ஆஸ்கர் மட்டுமல்லாமல் தேசிய விருதுகளும் பெற்றிருக்கிறார்.

2009-ல் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது மற்றும் கோல்டன் க்ளோப் விருது, 2010-ல் இரண்டு கிராமி விருதுகள் பெற்றார்.

இந்திய விருதுகள்

சிறந்த இசையமைப்பாளர் என்று 15 பிலிம்பேர் விருதுகளும், 17 பிலிம்பேர் சவுத் விருதுகளும் பெற்றுள்ளார்.

மாநில விருதுகள்

தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருதை 1995-ல் பெற்றுள்ளார். 2001-ல் உத்தரப்பிரதேச அரசு அவத் சம்மான் விருதும், 2004-ல் மத்திய பிரதேச அரசு லதா மங்கேஷ்கர் விருதும் வழங்கியுள்ளது.

இசைக்கு அளித்த பங்களிப்புகளுக்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஏ.ஆர்.ரஹ்மானை 2006-ல் கௌரவித்தது. 2008-ல் ரோட்டரி கிளப் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கியுள்ளது.