லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று(06/02/2025) வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இப்படம் முன்கூட்டியே வெளியாகியுள்ளது.
படம் பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
திரைப்படம் நன்றாக இருப்பதாகவும், அஜித்தின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ட்விஸ்ட் மற்றும் த்ரில்லர் நிறைந்த திரைப்படம் என்று தெரிவித்த ரசிகர் ஒருவர் விடாமுயற்சி திரைப்படத்திற்கு 4/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
இப்படத்தின் இயக்கத்திற்கும் திரைக்கதைக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.