சாதனை நாயகன் ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டவர். பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
டந்த 2007ம் ஆண்டு ஜுன் மாதம் அயர்லாந்து அணிக்கு ஏதிராக இந்தியாவிற்கான சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான ரோகித், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 2013ம் ஆண்டு அறிமுகமானார். 67 போட்டிகளில் 116 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 12 சதங்கள், 18 அரைசதங்கள் உட்பட 4 ஆயிரத்து 301 ரன்களை எடுத்துள்ளார், ரோகித் சர்மா .
273 ஒரு நாள் கிரிக்கெட் போடிட்களில் விளையாடி 11,168 ரன் எடுத்துள்ளார். 32 சதங்கள், 58 அரைசதங்கள் அடித்திருக்கிறார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மாவின் 264 ரன் எடுத்தது யாராலும் மறக்க முடியாது. இந்தப் போட்டியில் 33 பவுண்ட்ரிகளும் 9 சிக்ஸர்களும் விளாசியிருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் ஷர்மாதான்.
உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் 7 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் 15 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 661 ரன்கள் விளாசியுள்ளார்.
சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 637 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்
பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஹித் ஷர்மா. சாதனைகள் தொடரட்டும்.