ரசிகர்களின் நாயகன் அஜித் குமார் பிறந்தநாள்!
அஜித் குமார் - ஷாலினி காதல் அனைவரும் அறிந்ததே.கோலிவுட்டின் க்யூட் தம்பதி. அழகான குடும்பம், கார் ரேஸ் என அவரது தனிப்பட்ட விருப்பங்களுடன் வாழ்ந்து வருகிறார் அஜித்.
1992 ஆம் ஆண்டு அமராவதி படம் தமிழில் அஜித்குமார் ஹீரோவானார். 1999ல் முன்னணி ஹீரோவாக வளர்ந்தன் நிலையில் ஷாலினியுடன் இணைந்து “அமர்க்களம்” படத்தில் நடித்தார்.
அஜித் குமாரை ஒரு நடிகராக தெரிந்த எல்லாருக்கும் அவருக்கு மோட்டர் ரேஸின் மீது எவ்வளவு ஆர்வம் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கியவர்.
அஜித் குமாருக்கு 54-வது பிறந்தநாள் சிறப்பானது. கலைத்துறையில் அவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக நாட்டின் உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் தனக்கென ஒரு பந்தய அணியை உருவாக்கினார். அவரது அணி பங்கேற்ற பந்தயங்களில் எல்லாம் வெற்றி பெற்று வருகிறது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பல்வேறு சவால்களை சந்தித்து அதிலிருந்து மீண்டு அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் குமார். ஆரோக்கியத்துடன் விருப்பம்போல வாழ வாழ்த்துகள்.