’Good Bad Ugly'- முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
பிரபு,த்ரிஷா, பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
டான் ஆக இருக்கும் அஜித் தனத் மனைவி மற்றும் மகனுக்காக அனைத்து குற்றச்செயல்களையும் விட்டுவிட்டு சிறைக்கு செல்கிறார். இனி ரவுடி தொழிலில் ஈடுபடபோவதில்லை எனவும் உறுதி எடுக்கிறார்.
தனது மகனுக்கு ஏற்படும் ஆபத்தால் மீண்டும் ரவுடியாக களமிறங்கும் ஏகே, தனத் மகனை காப்பாற்றினாரா? பிறந்தது முதலே பிரிந்து இருக்கும் தனது மகனுடன் சேர்ந்தாரா? என்பதே குட் பேட் அக்லி படத்தின் கதை சுருக்கம்.
Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் முதல் நாளிலேயே ரூ.28.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிக்கெட் முன்பதிவு மூலமாக தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 15 கோடி ரூபாய் ஈட்டியதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 3 கோடி ரூபாய் அளவிற்கு முன்பதிவு மூலம் வருவாய் ஈட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்குகளில் நேரடி டிக்கெட் விற்பனை இன்றும் தொடர்கிறது. அதன்படி, சுமார் 35 கோடி ரூபாய் வரையிலும் குட் பேட் அக்லி, இந்தியாவில் முதல் நாளிலேயே வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
முதல் நாளிலேயே கு பேட் அக்லி திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.50 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.