'Good Bad Ugly' பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜிவி பிரகாஷ் தனது பின்னணி இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளார். படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்த மற்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
படத்தில் யாருமே எதிர்பார்க்காதது ஏகே ரெட் டிராகனாக எப்படி மாறினார் என்பதற்கான ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 3 கேமியோக்கள்தான்.
உலகளவில் 2 நாட்களில் 100 கோடியை கடந்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’ வசூல். இது அஜித்தின் திரையுலக வாழ்வில், 2 நாட்களில் 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
குட் பேட் அக்லி திரைப்படம் 4-வது நாள் வசூல் ரூ.20.50 கோடி.. இதன் மூலம் மொத்த வசூல் ரூ.84.50 கோடி ஆக உள்ளது.
தெலுங்கு ரசிகர்களிடமும் குட் பேட் அக்லி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குட் பேட் அக்லி உலக அளவில் மொத்தமாக ரூ.100 வசூல் செய்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் வெளியான படங்களில் குட் பேட் அக்லி மிகவும் சிறப்பான பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது.