நடிகை மஞ்சு வாரியர் விஷு கொண்டாட்டம் - புகைப்படங்கள்!
தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். நடிகை என்பதை கடந்து இவர் ஒரு குச்சிப்புடி நடனக் கலைஞரும் கூட.
இவரது தனித்துவமான நடிப்பிற்கு ஏராளமனா ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன்பிறகு, மஞ்சு வாரியர் மீண்டும் 2015 ஆண்டு முதல் ஆக்டிவாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் துணிவு, விடுதலை, வேட்டையன் ஆகிய படங்களில் நடிப்பில் மிரட்டினார்.
அசுரன் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் மஞ்சு வாரியர். வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலில் மஞ்சு வாரியர் டான்ஸ் மூவ்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் விஷு கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
செல்ல நாய்க்குட்டி உடன் மஞ்சு வாரியர்..
மஞ்சு வாரியருக்கு மோட்டர் பைக்குகள் மீது ஆர்வம் அதிகமாம்.