ஜெயிலர்-2 படப்பிடிப்பு புகைப்படங்கள்!

Published by: ஜான்சி ராணி

முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ரஜினி

நெல்சன் ரஜினி கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் 625 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2  உருவாகும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது.

கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. மொத்தம் 14 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்காக ரஜினி முன்பே கேரளா புறப்பட்டு சென்றிருந்தார்.

ரஜினி வணக்கும் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையிலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றார்கள்.