ஏஐ தொழில்நுட்ப வல்லுநரை சந்தித்த கமல்ஹாசன்!

Published by: ஜான்சி ராணி

சினிமாவில் பல தொழில்நுட்பங்களை முதல்முறை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்.

சினிமாவில் உலகளவில் அறிமுகமாகியுள்ள பல புதிய தொழில்நுட்பங்களை கற்று தெரிந்துகொண்டும் வருகிறார்.

லாஸ் வேகஸில் நடைபெற்ற ’National Association of Broadcasters' கண்காட்சியில் கமல்ஹாசல் பங்கேற்றார்.

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளஙகும் பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கமல்ஹாசன்

‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. - கமல்ஹாசன் டிவீட்.

அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.