டெட்பூல் அண்ட் வால்வரின் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் ஆகியோர் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உள்ளனர் மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்ட ஹூஜ் ஜாக்மென் நடிக்கும், வோல்வரின் உலக அளவில் ஒரு லெஜண்டரி கதாபாத்திரமாக கருதப்படுகிறது இதனிடையே, ரியான் ரெனால்ட்ஸ் நடிக்கும், டெட்பூல் கதாபாத்திரம் தனது எதார்த்தமான வடிவமைப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது டெட்பூல் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாகவே, டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் வந்துள்ளது லோகி சீரிஸில் வந்த டைம் வேரியண்ட் அதாரிட்டியை (TVA) சேர்ந்த, பாரடாக்ஸ் எனும் நபர் ஒட்டுமொத்த TVA அமைப்பையும் கைப்பற்ற நினைக்கிறார் அதேநேரம், டெட்பூல் உலகத்தைச் சேர்ந்த வோல்வரின் கதாபாத்திரம் (Anchor Being) இறந்ததால், அந்த ஒட்டுமொத்த உலகமும் அழிய இருக்கிறது இதனை அறிந்த பாரடாக்ஸ், டெட்பூலின் தேவையை கருதி அவரை காப்பாற்றி, வேறு உலகிற்கு அனுப்ப முயல்கிறார் அப்போது, தனது உலகம் அழியவிருப்பதை அறிந்த டெட்பூல், எப்படி பாரடாக்ஸிடம் இருந்து தப்பிச் சென்று தனது உலகை காப்பாற்றினார் என்பது தான் மீதிக்கதை பின்னணி இசை படத்திற்கு பெரும் பக்க பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக டெட்பூலின் எண்ட்ரி சீனில் வரும் பாடல் தியேட்டரை அலறவிடுகிறது ஒரு சில குறைகள் இருந்தாலும், ஆக்ஷன் மற்றும் காமெடி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது