ராயன் படத்தின் குட்டி திரை விமர்சனம்! சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன் எஸ் ஜே சூர்யா, கிஷன் , காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இரு ரவுடி கும்பல் மோதலுக்கு நடுவில் தனுஷின் தம்பி மாட்டிக் கொள்கிறார். தனுஷ் அவர் தம்பியை காப்பாற்ற ராவண அவதாரம் எடுப்பதே படத்தின் கதை படத்தில் தம்பி தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் மிகவும் உருக்கமாக அமைந்தது தனுஷ் அனைத்து கதாபாத்திரத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் சந்தீப் கிஷனிலிருந்து முதல் பாதியில் கதை தொடங்கி இரண்டாம் பாதியில் துஷாரா விஜயனிடம் முடிகிறது எஸ் ஜே சூர்யா எப்போதும் போல் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் படத்தில் சில சண்டை காட்சிகளை மட்டும் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் அசுரன், வாட்டர் பாக்கேட் பாடல்கள் தியேட்டரில் வைப்பாக மாறியாது ஆக்ஷன் படம் பிடித்தவர்கள் கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்