நஸ்ரியாவின் ‘சூக்சுமதர்ஷினி’ திரைப்படத்திற்கு விருது அறிவிப்பு!
நஸ்ரியா நசீம், பசில் ஜோசப் நடிப்பில் எம்.சி.ஜிதினின் இயக்கத்தில் கவனம் ஈர்த்த மலையாளத் திரைப்படமான ‘சூக்சுமதர்ஷினி’ (Sookshmadarshini).
குறைந்த ஆள்நடமாட்டமுள்ள வசிப்பிடப் பகுதியில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியா என்கிற பிரியதர்ஷினி வசிக்கிறார். பக்கத்து வீட்டில் மேனுவேலும் அவருடைய வயதான தாய் கிரேஸும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க வருகின்றனர்.
எதையும் தெரிர்ந்துகொள்ளும் குணமுள்ள பிரியதர்ஷனி, மேனுவேல் வீட்டில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளின் உண்மையை கண்டறிகிறார். உண்மைகளை கண்டறியும் பயணத்தில் வெற்றி பெற்றாரா என்பதே கதை.
கதை ஒருவரது பார்வையில் மட்டும் கதையை நகர்த்தாமல் பல்வேறு கோணங்களில் சொல்வது ரசிகர்களை ஈர்த்தது.
முதன்மைக் கதைமாந்தர்களான நஸ்ரியா நஸீம், பசில் ஜோசப் ஆகிய இருவரும் ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பை வழங்கியிருப்பர்.
ப்ரியாவின் தோழிகளாக வரும் அகிலா பார்கவான், பூஜா மோகன்ராஜ் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.
அவ்வப்போது கழுகுப் பார்வையில் கதையை நகர்த்தும் ஷரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவும் த்ரில்லிங் உணர்வை தரும்.
2024-ம் ஆண்டிற்கான 48th Kerala Film Critics விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறந்த திரைப்படம் ’Second Best Film Sookshmadarshini’ விருதையும் சிறந்த நடிகைக்கான விருதை நஸ்ரியா நஸிம் பெற்றுள்ளார்.
சூக்சுமதர்ஷினி (Sookshmadarshini) ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் காணக் கிடைக்கிறது. த்ரில்லிங்க் திரைக்கதையோடு சமூக அரசியல் கதையும் இது.