அபர்ணா தாஸை கரம் பிடித்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக்! அபர்ணா தாஸிற்கும் மஞ்சுமெல் நடிகர் தீபக் பரம்போலிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வந்தது மனோகரம் எனும் மலையாள படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது அதன் பின்னர் இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக நடித்து பிரபலமானார்கள் கல்யாணத்திற்கு முன், ஹல்தி, சங்கீத் ஆகிய நிகழ்ச்சிகள் உற்றார் உறவினர் சூழ நடைப்பெற்றது திருமண விழாவில் நடந்த சிறப்பான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் அபர்ணா இன்று (24 ஏப்ரல் 2024 ) கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் திருமணம் நடந்துள்ளது கேரள மக்களின் பாரம்பரிய உடை அணிந்த இருவரும், பலரது ஆசிகளுடன் திருமணம் செய்து கொண்டனர் புது தம்பதிகளான இவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அபர்ணாவிற்கும் தீபக்கிற்கும், ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்