நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேணி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரேக்-டவுன் எனும் ஆங்கில படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால், இப்படத்தின்மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட விஜய் ரசிகர்களின் வாழ்த்துகள் தான் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது உண்டு.
படங்கள் வெளியாகும் ஒவ்வொரு முறையும் அணில் vs ஆமை போட்டி துவங்கிவிடும்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை, விடாமுயற்சி திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள், பத்மபூஷன் அஜித்தின் விடாமுயற்சி வெற்றி அடையட்டும் என வாழ்த்துகள் தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அஜித் கார் ரேஸ் பக்கம், விஜய் அரசியல் பக்கம் என இருவரும் சினிமாவை தாண்டி தங்கள் அடுத்தக்கட்ட பயணத்தை தொடங்கியதுதான்.
மேலும், எதிர்மறையான விமர்சனங்கள் ஜனநாயகன் திரைப்படத்தையும், விஜய்யின் அரசியல் கட்சியையும் பாதிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு விஜய் ரசிகர்கள் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.