சதா 2002ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் திரைப்படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் 2015 ஆம் ஆண்டு வெளியான எலி திரைப்படத்தில் சதா வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சதாவுக்கு வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும் அவ்வப்போது அவரது க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்