சின்னத்திரை நடிகை ஹிநா கான் நீண்டகால காதலரான ராக்கி ஜெய்ஸ்வாலை நெருக்கமான விழாவில் திருமணம் செய்து கொண்டார். தனத் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்
அந்த தம்பதியினர் சட்டப்பூர்வமாக தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்தினர். ஹினா திருமண பதிவு ஆவணங்களில் கையெழுத்திடும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஹினா ராக்கி திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்
ஹினா தனது தொலைக்காட்சி புகழ், விளம்பரங்கள் மற்றும் தோற்றங்கள் மூலம் சுமார் 52 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு வைத்துள்ளார் என கூறப்படுகிறது.
எழுத்தாளரும், கிரியேட்டிவ் தயாரிப்பாளருமான ராக்கி, சுமார் 7 முதல் 10 கோடி ரூபாய் வரை நிகர சொத்து மதிப்பு வைத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, மணமக்கள் இருவரும் சேர்ந்து சுமார் 60 முதல் 62 கோடி ரூபாய் மதிப்புடையவர்களாக மதிப்பிடப்படுகிறார்கள்.
ஹினா ஆடி ஏ4, ஆடி க்யூ7 போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார், மேலும் மும்பையில் உள்ள ஒரு ஆடம்பரமான குடியிருப்பில் வசிக்கிறார்.
ஹினா சமீபத்திய புற்றுநோய் சிகிச்சையின் போது காதலன் ராக்கி அவருக்கு பெரிய பக்க பலமாக இருந்தார்
ஹினா மற்றும் ராக்கி ஆகியோர் விரைவில் வெளிவரவிருக்கும் Pati Patni Aur Panga என்ற நிகழ்ச்சியில் ஒன்றாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.