'Tourist Family' படம் எப்படி இருக்கு?
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இலங்கையில் இருந்து சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம்.
யாரிடமும் நாங்கள் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழ முடிவு எடுக்கின்றனர். ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை.
இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதோடு, இறுதியில் தாஸின் குடும்பத்திற்கு என்ன ஆகிறது என்பதையும் பேசியிருக்கிறது, டூரிஸ்ட் ஃபேமலி
அழகான ஒளிப்பதிவு, நல்ல திரைக்கதையுடன் தாஸ் குடும்பத்தின் வலியை பேசுகிறது. படம்
சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆகியிருந்தாலும் எமோசனலாக பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.
புலம்பெயர்ந்த மக்களின் வலி, அரசியல், அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல் உள்ளிட்ட பல விசயங்களை பேசியிருக்கிறது.