தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி, டியர் காமரெட், உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் படு தோல்வியடைந்தது 90 கோடி ரூபாய் செலவில் உருவான லைகர், 30% லாபத்தைக் கூட பார்க்கவில்லை லைகரின் தோல்வியினால் விமர்சனத்திற்கு உள்ளானார் விஜய் தேவரகொண்டா லைகர் படத்தில் ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது அமலாக்கத்துறை இது குறித்து லைகர் படக்குழுவின் மீது விசாரணை மேற்கொண்டது விஜய் தேவரகொண்டாவிற்கும் விசாரணையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது விஜய் தேவரகொண்டா ஹைதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் இந்த செய்தி திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது