மறுமணம் செய்ய போகிறாரா நடிகை மீனா? மாப்பிள்ளை இவர்தானா? குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளுள் ஒருவரானவர் நடிகை மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை 2009-ல் திருமணம் செய்துகொண்டார் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி காலமானார் இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார் அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் மீனா ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது கணவரின் இறப்புக்கு பிறகு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார் மீனா இந்நிலையில் நடிகை மீனாவின் மறுமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு நடிகை மீனா மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது அவர் மறுமணம் செய்யப்போகும் நபர் மீனா குடும்பத்திற்கு நீண்ட கால நண்பர் என்றும் கூறப்படுகிறது இந்த செய்தி மீனா தரப்பில் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை