நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வாரிசு தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் வாரிசு படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியானது படத்தின் போஸ்டர்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது சில நாட்களுக்கு முன்னர் வெளியான வாரிசு படத்தின் ஸ்டில்ஸ், வைரலானது வாரிசு படம், பொங்கலன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது வாரிசு படத்தின் புதிய போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது