தவெக - ஓர் ஆண்டு பயணம்
தவெக கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு விழா இன்று மாமல்லபுரம் அருகே நடைபெற்றது
இந்த ஓர் ஆண்டில் தவெக கட்சி கடந்து வந்த பாதையை காண்போம்
கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார் தவெக தலைவர் விஜய்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 2024 அக்டோர்பர் 27 -ல் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்திக்காட்டினார் விஜய்
அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார்,அஞ்சலை அம்மாள் தான் எங்கள் கொள்கை வழிகாட்டிகள் என்று சொன்னார்
கொள்கை எதிரியாக பாஜகவையும் அரசியல் எதிரியாக திமுகவையும் மாநாட்டிலேயே கூறியிருந்தார்
அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார். மற்றும் ஆளுனர் ரவியை சந்தித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்று போராடிய மக்களை நேரில் சந்தித்து பேசினார். அங்கிருந்து அவரின் கள அரசியல் பயணம் தொடங்கியதாக கூறினார்
தவெகவின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில்120 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார் விஜய்
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் என மாற்றுக்க்கட்சிகளை சேர்ந்தவர்களை தவெகவில் இணைத்தனர்
தற்போது பிப்ரவரி 26 ஆம் தேதி முதலாம் ஆண்டு நிறைவு விழாவை தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாடினர்