TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 29

Published by: அனுஷ் ச

வேர்பாரு : தாழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே என்ற வரியை சொன்னவர் ?

சித்தர்கள்

எச்சம் எத்தனை வகைப்படும் ?

இரண்டு

மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர் ?

கவிமணி

கவிமணி தேசிய விநாயகத்தின் மொழி பெயர்ப்பு நூல் ?

உமர்கய்யாம் பாடல்

தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?

நீலகேசி

நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை ?

மூன்று

குற்றால முனிவர் என அழைக்கப்படுபவர்?

இரசிகமணி

உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்?

பாரதிதாசன்

நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர்?

திருஞானசம்பந்தர்

இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?

கண்ணதாசன்