தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் எது? தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி செறு என்பதன் பொருள் வயல் தமிழ் மூவாயிரம் என்னும் வேறு பெயர் கொண்ட நூல் எது? திருமந்திரம் தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர் யார்? சேக்கிழார் யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்? அறவணவடிகள் கப்பரைப் புரத்தவர் யார்? சடையப்ப வள்ளல் ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்ந்தார்? ஆங்கிலம் நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு ? 2004 திரு.வி. கல்யாண சுந்தரனார் எழுதாத நூல் எது? சித்திரக்கவி மணநூல் என அழைக்கப்பெறும் நூல் ? சீவக சிந்தாமணி