பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே! - சில ஆலோசனைகள்!
தமிழ்நாட்டில் 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாதம் இது. மாணவர்கள் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள சில ஆலோசனைகள்..
தேர்வில், பயிற்சியும் முயற்சியும் இருந்தால் விண்ணில் கூட தடம் பதிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் படிப்பது சிறந்தது. படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் படித்தல் நல்லது.
படித்த பாடத் தகவல்களை நினைவில் நிறுத்த சில உத்திகளைப் பயன்படுத்தலாம். தேர்வின்போது, படித்த தகவல்களை வரிசைப்படுத்தி தெளிவாக விடை அளித்தல் வேண்டும். அதற்கு பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
மனதை தெளிவாக உற்சாகமாக வைக்க, தேர்வு காலங்களில் உடலை நன்முறையில் பாதுகாப்பது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து படிப்பது கூடாது.
தேர்வு நேரத்தில், மூளையை ஆரோக்கியத்துடன் வைத்தால் தான், படித்த பாடங்களை நினைவுகூர்ந்து எழுத முடியும். நல்ல ஓய்வும் அவசியம்.
தேர்வு குறித்து பயம் எழுவது இயல்பானதுதான். ஆனால், அதிலிருந்து விடுபட தயாரிப்பும் பயிற்சியும் உதவும்.
தேர்வு எழுதத் தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து வைத்துகொள்ளவும். தேர்வு நடைபெறும் நேரத்துக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.