தேர்வு அச்சம் வேண்டாமே - சில டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

சரியான நேரத்தில் போதுமான அளவு சாப்பிடுகிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.

ஆவியில் அவித்த உணவை உண்பது நல்லது. தேவையான அளவு சாப்பிட வேண்டும்; வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. எளிதில் செரிமானமாகும் உணவே இரவில் முக்கியம்.

மாணவர்கள் ஆறு மணி நேரத்துக்கும் குறையாமல் தூங்குவது அவசியம்.

உடலுக்கு நல்ல ஊட்டத்தைத் தருவதற்கும் மோர், பழச்சாறு, சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

சாஃப்ட் டிங்க்ஸ் தவிர்ப்பது நல்லது. சைவ-அசைவ சூப் குடிக்கலாம். சிப்ஸைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கம் இல்லை என்றால் குழப்பம் வரும். நினைவுத் திறன் பாதிக்கப்படும்.

கவனத்துடன் படிக்கவும். மனதில் பதியும் என்ற நம்பிக்கையுடன் படிக்கலாம்,.

படிக்கும் அளவுக்கு ஓய்வும் மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதல்ல. மதிப்பெண் மட்டும் முக்கியமல்ல. வாழ்க்கை மட்டுமே முக்கியம். நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்க.