இணையம் மூலம் MBA படிப்பு அறிமுகம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக இணையம் மூலம் கற்கும் எம்பிஏ படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது
பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது மேலாண்மை எம்பிஏ படிப்பு இதில்
வழங்கப்படுகிறது.
ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் தொலைதூரக் கல்வி வாரியம் ஆகிய இரண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளன
இதற்கான நுழைவுத்தேர்வை எழுத மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இளங்கலைப் படிப்பை முடித்த
பட்டதாரிகள் onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
எம்பிஏ படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், Online Education Entrance Test - OEET என்கிற ஆன்லைனில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது.