உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் சிந்தனையை வளர்த்து, மாணவர்களை சுயாதீன கற்பவர்களாக தயார் படுத்துவதே ஐபி பள்ளியின் நோக்கம்.
மாணவர்கள், உலகளவில் உள்ள பல்கலைகழகங்களில் உயர்கல்வி பெரும் வகையில் பாட திட்டங்கள் அமைந்திருக்கும்.
1.சாதனைகள் மட்டுமில்லாமல், மாணவர்களின் தனிப்பட்ட சமூக வளர்ச்சியிலும் உணர்ச்சி வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகின்றனர்.
2.கேள்வி அடிப்படையிலான பாடத்திட்டம் மூலம் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்துகின்றனர்.
3.ஐபி பள்ளிகள் சர்வதேச பிரச்சனைகள், உலகளாவிய கலாச்சாரங்களின் பாடத்திட்டம் வைத்து சர்வதேச மனநிலையை வளர்க்கின்றனர்.
4.உலக பல்கலைகழகங்களால் ஐபி டிப்ளமோ அங்கீகரிக்க படுகிறது. இதனால் உயர் கல்விக்கான அணுகு முறைகள் எளிதாகின்றன.
5.மாணவர்கள் சுயவிருப்பப்படி கற்பது, வலுவான ஆராய்ச்சியை மேற்கொள்வது மற்றும் நேர மேலாண்மை திறனை வளர்ப்பதன் உரிமையை வழங்குகின்றன.
6.IB பாடத்திட்டங்கள் கடினமாக கருதப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆழமாக ஆராய்ந்து படிக்கவும் தூண்டுகிறது.
7.பல்வேறு துறைகளை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பரந்த அளவிலான பாடங்கள் அமைந்துள்ளது. இதனால் அவர்களின் ஆர்வமும், ஆராய்ச்சி திறன் அதிகரிக்கும்.
8.IB பள்ளிகள் மாணவர்கள் ஒத்துழைத்து குழுப்பணி ஆற்ற வழிவகுகின்றன. இதனால் குழுப்பணி மற்றும் சமூக திறனை ஊக்குவிக்கும் சிறந்த சமூகத்தை உருவாக்குகின்றன.
சராசரியாக 4-5 லட்சம் வரை ஐபி பள்ளிகளின் கல்வி கட்டணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் போக்குவரத்து கட்டணம், சீருடை கட்டணம், விடுதி மற்றும் பாட பொருட்கள் கட்டணம் அடங்காது.
CBSE யை விட IB பள்ளியின் கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதற்கு, உலகளாவிய பாடத்திட்டங்கள் உள்ளதே காரணம்.