கேரட் வேர்க்காய்கறிகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடுவதில் முதலில் இருப்பது இந்த கேரட்தான் ஆனால் சரியான முறையில் சாப்பிடாத போது அதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராமல் போகலாம் கேரட்டை எப்படி சாப்பிட்டால் அதிக சத்துகள் கிடைக்கும்? கேரட்டை பச்சையாகவோ, சமைத்தோ, ஜூஸாகவோ சாப்பிடலாம் ஆனால் அதை எதனோடு சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதை பொருத்து தான் அதன் சத்துக்களும் நமக்கு கிடைக்கும் கேரட்டில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து இரண்டும் இருக்கின்றன கேரட்டை ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது சிறிது ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம் ரீஃபைண்ட் செய்யாத, ஏதேனும் ஆரோக்கியமான எண்ணையைப் பயன்படுத்தி கேரட்டை சமைத்து சாப்பிடலாம் கேரட்டை பச்சையாக சாப்பிடும் போது யோகர்ட் (அ) தயிரில் சீரகப் பொடி, உப்பு போன்றவற்றைச் சேர்த்து அதில் தொட்டு சாப்பிடலாம்