குடியரசுத்தலைவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார் குடியரசுதலைவர் திரௌபதி முர்மு 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த முர்மு அங்குள்ள அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் கோவிலுனுள் வருகை தந்தபோது அவருக்கு நல்ல வரவேற்ப்பு அளிக்கப்பட்டது குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர் குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் குங்குமம் பிரசாதத்துடன் மீனாட்சியம்மன் சிலையும் வழங்கப்பட்டது சாமி தரிசனம் முடித்த அரசு சுற்றுலா மாளிகைக்கு கார் மூலமாக புறப்பட்டு சென்றார் அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக கோவை செல்கிறார் குடியரசு தலைவரின் மதுரை விசிட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன இதை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்