கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம் மழைக்காலத்தில் பல தொற்று நோய்கள் வரும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மழை காலத்தில் வரும் தொற்று நோய்களை தவிர்க்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் பானங்களை பற்றி பார்ப்போம் தேன் - எலுமிச்சை - இஞ்சி மூன்றையும் கொதிக்க வைத்து குடித்து வரலாம் இளநீரில் எலுமிச்சை சேர்த்து குடித்து வரலாம் ஆரஞ்சு மற்றும் கேரட் இரண்டையும் தனியாக சாறு எடுத்து குடித்து வரலாம் தண்ணீரில் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம் திப்பிலி - மிளகு -இஞ்சி ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரலாம் மசாலா டீ குடித்து வரலாம்