பெண்கள் வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்ய, பெடிக்யூர் செய்யலாம்



இவ்வாறு செய்யும் போது பாதங்களில் அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்



பெடிக்யூர் மூலம் நம்முடைய கால்களை சுத்தம் செய்வதற்கு முன் முதலில் நாம் நகங்களை சரியாக வெட்டி விட வேண்டும்



பின்னர் நெயில் ரிமூவரின் உதவியுடன் நகங்களில் உள்ள பழைய நெயில் பாலிஷை அகற்ற வேண்டும்



கால்களில் கொஞ்சம் கிரீம் அல்லது தேனை கொண்டு மசாஜ் செய்யலாம்



பின்னர் சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை சிறிது நேரம் அந்த தண்ணீரில் வைத்து மசாஜ் செய்யுங்கள்



வீட்டில் இருக்கும் பழைய பிரஷ்களை கொண்டு நகங்களை சுத்தம் செய்யலாம்



இதையடுத்து கால் விரல்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், எலுமிச்சை துண்டுகளைக் கொண்டு கால்களில் தேய்க்கலாம்



கால்களை சர்க்கரை கொண்டு ஸ்க்ரப் செய்து பின்னர் சூடான தண்ணீரில் நனைத்த துண்டால் துடைத்து எடுத்து விட வேண்டும்



இறுதியாக தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும்