நம்மில் பலரும் கடைகளில் விற்கும் வாசனை ரூம் ஸ்ப்ரேக்களை பயன்படுத்துகிறோம்



இதனால் ஹார்மோன் சமநிலையின்மை, நுரையீரல் பிரச்சினை வரலாம்



சிலருக்கு அந்த நறுமணம் கூட ஒவ்வாது



வீட்டிலேயே வாசனை ரூம் ஸ்ப்ரேவை செய்வது எப்படி என பார்க்கலாம்



முதலில், கற்பூரத்தை பவுடர் போல் நன்று இடித்துக்கொள்ள வேண்டும்



அத்துடன் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலக்க வேண்டும்



எலுமிச்சை நறுமணம் பிடிக்காதவர்கள், அதற்கு பதிலாக ஒர்ஜினல் ரோஸ் வாட்டரை கலக்கலாம்



இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அடிக்க வேண்டும். இந்த கலவையை 1 வாரம் வரை வைத்துக்கொள்ளலாம்



இவை வீட்டில் நிலவும் துர்நாற்றத்தை போக்கும். அத்துடன் பூச்சிகளும் வீட்டில் அண்டாது



நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது