கண்ணாடி போன்ற முகம் வேண்டுமா? இருக்கவே இருக்கு ரைஸ் ஃபேஸ் மாஸ்க்! கண்ணாடி போல் ஜொலிக்கும் முகத்தை பெறுவது பெரும்பாலான பெண்களின் கனவாகவே உள்ளது அதை பெற பல ஆயிரங்களில் பணத்தை செலவு செய்கின்றனர் அவ்வளவு பணம் செலவு செய்வது என்பது நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு இயலாது எனவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி ஜொலிக்கும் முகத்தை பெறலாம் என்பதை பார்க்கலாம் முதலில் அரிசியை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும் பிறகு அதனை குழைய வேக வைத்து கொள்ளவும் பிறகு வேக வைத்த அரிசியில் தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும் அவ்வளவு தான் இந்த மாஸ்க்கை சிறிது நேரம் முகத்தில் விட்டு கழுவி விட வேண்டும் இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் கண்ணாடி போன்ற பொலிவை பெறும் என கூறப்படுகிறது