ஹெல்மெட் அணிவதால் முடு உதிர்கிறது என்பது பல ஆண்களின் பிரச்னையாக உள்ளது ஒரு ஆரோக்யமான கூந்தல் உடையவர் ஹெல்மெட் அணிந்தால் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது ஆனால் ஏற்கனவே கூந்தல் பிரச்சனைகள் உள்ளவர்கள் அழுக்கான ஹெல்மெட் அணியும் போது முடி உதிர்வு ஏற்படலாம் அவ்வாறு ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க இதை செய்யுங்க..! ஹெல்மெட்டின் உள்பகுதியை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தலைக்குப் பொருந்துகிற சரியான அளவிலான ஹெல்மெட்டை பயன்படுத்துங்கள் ஹெல்மெட் போடுவதற்கு முன் தலைக்கு வேண்டுமானால் ஒரு காட்டன் துணியை கட்டிக் கொள்ளலாம் ஈரமான தலைமுடியின் மேல் ஹெல்மெட் போடக் கூடாது. முடியை நன்கு உலர்த்திவிட்டு ஹெல்மெட் போடுங்கள் தலைமுடி உதிர்வைத் தடுக்க ஹெல்மெட் மட்டுமே காரணம் கிடையாது. தலைமுடி பராமரிப்பும் மிக அவசியம் முடி உதிர்தல் பிரச்சினை இருந்தாலும் கூட மோட்டார் பைக்கில் போகும் போது நிச்சயம் ஹெல்மெட் அணியுங்கள்